எச்.ராஜா மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாஜக எம்.எல்.ஏ. எச்.ராஜா மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் டி.வி.கணேஷ் தாக்கல் செய்துள்ளமனுவில், கடந்த 2004ம் ஆண்டு நம்பர் மாதம் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாஜக சார்பில்நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் விமர்சித்து எச்.ராஜாபேசினார்.

இது முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.

உள்நோக்கத்துடனும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் ராஜா இவ்வாறு பேசியுள்ளார்.

முதல்வரை இந்து விரோதி என்றும் ராஜா வர்ணித்துள்ளார். இதன் மூலம் முதல்வரின் பெயருக்கு களங்கம்ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராஜா அவ்வாறு பேசியுள்ளது தெளிவாகிறது என்று கணேஷ்கூறியிருந்தார்.

இந்த மனு ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா நேரில்ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+