பட்டாசு வெடித்தால் அபராதம்! பாமகவினருக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை:
பாமக கூட்டங்களில் இனிமேல் யாரும் பட்டாசு வெடிக்கக் கூடாது. அப்படி வெடித்தால் அவர்களுக்கு ரூ. 5000 அபராதம்விதிக்கப்படும் என கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு மைலாப்பூரில் ராமதாஸ் தலைமையில் நடந்தது.இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், பொதுமக்கள் பயணம் செய்யும் சாலையை அடைத்தால் போக்குவரத்து என்னஆகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே யாரும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கக் கூடாது.
அதேபோல என்னைப் பாராட்டி வெற்றி கோஷம் போடாதீர்கள். அய்யா வாழ்க என்று மட்டும் கூறினால் போதும். ஒலி மாசுஏற்படும் வகையில் கத்திக் கூச்சல் போடக் கூடாது.
இதே மாதிரி, கூட்டங்களின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது என்று ஏற்கனவே கூறியுள்ளேன். அப்படி வெடித்தால் 1000ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளேன். இனிமேல் நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் யாராவது பட்டாசுவெடித்தால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பாமகவினர் ஒவ்வொருவரின் நாவிலும் தமிழ் தான் ஒலிக்க வேண்டும். தேனீர் கடை என்று பெயர் மாற்றி கூற வேண்டும். தமிழ்மொழியில் ஆங்கிலம் கலந்து பேசுவதைக் கேட்கவே வேதனையாக இருக்கிறது.
நமது கட்சியை மரம் வெட்டிக் கட்சி, வன்முறைக் கட்சி என்றார்கள். ஆனால் நமது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்அன்புமணி இன்று செய்து கொண்டிருக்கும் காரியங்களை டெல்லியில் உள்ள தலைவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள தலைவர்கள் தான் அவரைப் பாராட்டுவதில்லை.
நாம் ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் ஒரே ஆண்டில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மையானமாநிலமாக மாற்றிக் காட்டுவோம் என்று முன்பு நான் கூறியிருந்தேன். அதையே இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.அதற்கான காலம் கனியும் என்றார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications