நீதிபதிகள் மகாராஜாக்கள் கிடையாது: கட்ஜூ
சென்னை:
நீதிபதிகளும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அவர்களுக்கும் எல்லை உண்டு. அதை மீறி நடந்தால் பின் விளைவுகள்பயங்கரமாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கட்ஜூ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைத் தள்ளுபடி செய்து கட்ஜூஉத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், பொது நலன் மனுவை விசாரிக்க சில அடிப்படை விதிகள் உள்ளன. அந்தவிதிகளை மீறக் கூடாது, எல்லைகளை எந்த வகையிலும் மீறக் கூடாது.
விளம்பர நோக்கிலோ, உள்நோக்கத்திலோ தாக்கல் செய்யப்படும் பொது நலன் மனுக்களை தாக்கல் செய்வது அதிகரித்துவருகிறது. மனுதாரர்கள் கேட்பதை எல்லாம் உத்தரவாகப் பிறப்பிக்க நீதிபதிகள் மகாராஜாக்கள் இல்லை.
இதை மீறினால் பின் விளைவுகள் ஏற்படும். நீதிபதிகளும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அதை மீற முயற்சிக்கக் கூடாதுஎன்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications