நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை: ஜெ.
சென்னை:
2005-06ம் ஆண்டுக்கான தொழிற் கல்வி மாணவர் சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள்அடிப்படையிலேயே நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகுந்த சிந்தனைக்கும், கவனமான ஆய்வுக்கும் பின்னரே நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தேவையற்ற சுமை, செலவு, மன அழுத்தம், கவலை ஆகியவற்றைப் போக்கும் மிக அவசியமான சீர்திருத்தம் என இதனைபொதுமக்கள் வரவேற்றனர். கிராமப்புற மக்களும் இந்த புதிய முறையை வரவேற்றனர்.
ஆனால் இந்த புதிய முறையை எதிர்த்து ஒரு சில மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, அரசின்கொள்கையையும், நோக்கத்தையும் உயர்நீதிமன்றம் பாராட்டியது. இருப்பினும் மத்திய சட்டத்தின் சில விதிமுறைகளை சுட்டிக்காட்டி அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. ஆனால் மத்திய சட்டத்தின் சிலஅம்சங்களை சுட்டிக் காட்டி, உயர்நீதிமன்ற ஆணைக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
எனவே இந்த ஆண்டும் முந்தைய சேர்க்கை முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். இது தொடர்பாக விரிவானஆணைகள் தனியே பிறப்பிக்கப்படும்.
மத்திய சட்டத்தின் கீழ் உள்ள, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான விதிமுறைகளை மாற்ற மத்தியில் ஆட்சி அதிகாரத்தில்உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அறிய விரும்புகிறேன்.
கிராமப்புற மாணவர்களுக்கும் தொழில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். அடுத்த கல்வியாண்டுமுதல் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்றதொரு முறையை அமல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications