நடிகர் சரத்குமாரின் அண்ணன் விபத்தில் பலி
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் நடிகர் சரத்குமாரின் அண்ணன் சுதர்சன் பலியானார். அவரது மனைவி,மற்றும் உறவினர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சரத்குமாரின் அண்ணன் சுதர்சன் (வயது 52). இவர் நாடார் மகாஜன சங்க பொருளாளராகவும், அகில இந்திய நாடார்நாடார் இளைஞர் பேரவை மாநில தலைவராகவும் இருந்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர்,
மாத்தூர் ஜெயராஜ் அன்னபாக்கியம் பார்மஸி கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஆகிய பதவிகளிலும் இவர், இருந்துவந்தார்.
இந் நிலையில் சுதர்சனம் தனது உறவினர்களுடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு சென்னை நோக்கிதிரும்பிக் கொண்டிருந்தார். காரை சுதர்சனம் ஓட்டினார். நேற்று மாலை 4.30 மணியளவில் திருவள்ளூருக்கும்,வெள்ளவேடுக்கும் இடையே புதுச்சத்திரம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் கார் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த சுதர்சன் அந்தஇடத்திலேய பலியானார். காரில் இருந்த அவரது மனைவி ஷைலா (வயது 42) மற்றும் சுதர்சனத்தின் உறவினர்களானமும்பையைச் சேர்ந்த பிரேமா (வயது 60), நாக்பூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகள்கள் நீதா (வயது 21), மீனா (வயது 22)ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுதர்சனத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கே.எம். சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சுதர்சனத்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பெசன்ட்நகர் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications