சர்ச்சைக்குரிய வனச்சரகர் ராஜேந்திரன் மீண்டும் கைது
திண்டுக்கல்:
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய பெரியகுளம் வனச் சரகர் ராஜேந்திரன், கார் கடனைத் திருப்பிக் கேட்ட வங்கி ஊழியர்களைமிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியகுளம் வனச் சரகராக இருந்து வந்தவர் ராஜேந்திரன். பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர்,வனப் பகுதியில் மரங்களை வெட்டுவதாக புகார் கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார் ராஜேந்திரன். பின்னர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும்பணியில் சேர்ந்தார். அதன் பிறகும் கூட அவருக்கு பல்வேறு சிக்கல்கள் கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டியதாக ராஜேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் உள்ள வங்கியொன்றில் கடந்த 2003ம் ஆண்டு கார் வாங்குவதற்காக கடன் வாங்கினார்ராஜேந்திரன்.
ஆனால் தவணைப் பணத்தை அவர் முறையாக செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து 3 நாட்களுக்கு முன்புவங்கி ஊழியர்கள், ராஜேந்திரனுடைய காரைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வங்கிக்கு சென்ற ராஜேந்திரன், அங்கிருந்த ஊழியர்களைத் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கிமேலாளர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ராஜேந்திரனை போலீஸார் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications