• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டி.ஆர். நடத்தும் சைக்கிள் ஓட்டும் போராட்டம்

By Staff
|

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தப் போவதாக லட்சிய திமுக தலைவர் விஜயடி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பதவிக்கு வந்த நாள் முதல் பெட்ரோல், டீசல்விலையை உயர்த்தி வருகிறது. இதனால் கீழ்த்தட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

அவர்களது வயிற்றில் மத்திய அரசு அடித்துள்ளது. இதே நிலை நீடித்தால் எல்லோரும் மோட்டார் வாகனங்களில் செல்வதற்குப்பதில், சைக்கிளில் தான் செல்ல வேண்டி வரும்.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் அருகே 14ம் தேதி காலை 10 மணிக்குலட்சிய திமுக சார்பில் சைக்கிள் ஓட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் ராஜேந்தர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X