தத்துவம் பேசி பலன் இல்லை! எல்.கணேசன்
சென்னை:
தத்துவம் பேசிக் கொண்டிருப்பதால் ஒரு பலனும் இல்லை. பேச்சைக் குறைத்துக் கொண்டு எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில்வெற்றி பெற மதிமுகவினர் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம், மத்திய அமைச்சர் பதவியும் வகித்துள்ளோம். ஆனாலும் இதுவரை ஒருசட்டசபைத் தேர்தலில் கூட நாம் வெற்றி கண்டதில்லை. எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் போட்டியிடுவோம், வெற்றிபெறுவோம், சட்டசபைக்குள் நுழைவோம்.
அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பணத்தை செலவு செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இப்போதுஉள்ளது. எனவே தேர்தலை சந்திக்க முக்கியமாக தேவை பணம். வெறுமனே தத்துவம் பேசிக் கொண்டிருப்பதால் ஒரு பலனும்இல்லை.
தேர்தலை சந்திக்க இப்போதே மாவட்ட வாரியாக மதிமுகவினர் தயாராக வேண்டும். நிதி திரட்ட வேண்டும். இந்த நிதியைவைகோவே நேரில் வந்து பெற்றுக் கொள்வார். திமுகவை அண்ணா தான் வளர்த்தார். அதேபோல இப்போது மதிமுகவைவைகோ வளர்த்துக் கொண்டுள்ளார்.
அவருக்கு தோள் கொடுத்து மதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் முழுவீச்சில் பாடுபட வேண்டும். மற்ற தலைவர்களைப் போல நிதியைப் பூட்டி வைத்துக் கொண்டு ஒப்புக்கு எதையாவது தரமாட்டார்.
நீங்கள் கொடுக்கப் போகும் பணத்தை உங்களிடமே கொடுப்பார். எனவே சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்வகையில் தொண்டர்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். மக்கள் பணியாற்ற நாம் சட்டசபைக்கு செல்வது அவசியம்என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார் கணேசன்.
கூட்டத்தின் போது, சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் திருவாசக வெளியீட்டு விழாவின் போது வைகோ நிகழ்த்தியஇலக்கிய முழக்கத்தின் ஒலி நாடா வெளியிடப்பட்டது. சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இதை தயாரித்துள்ளார்.
இந்த ஒலி நாடாவை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வைகோ வழங்கினார். இதுதவிர சேது சமுத்திரத் திட்டம்நிறைவேற பாடுபட்டதற்காக நெல்லையைச் சேர்ந்த அபுபக்கர் என்பவர் வைகோவை புகழ்ந்து பாடிய ஒலி நாடாவும்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications