சேது சமுத்திரம்: மணல் அள்ளும் பணி தீவிரம்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று முதல் 7,500 கன மீட்டர் மண்ணைஅப்புறப்படுத்தும் பணி தொடங்குகிறது.
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திட்டம் தொடங்கிய 10 நாட்களில் 2 லட்சம்கனமீட்டர் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் தினமும் ஆய்வுகள் நடத்தும் பணியில்காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. மண்ணை தோண்டும் இடம், கொட்டும் இடம் குறித்து விரிவானஆய்வுகள் நடத்தப்படுகிறது.
மண்ணை கொட்டும் இடத்திற்கு அருகாமையில் கோடிக்கரை பறவைகள் சரணாலயமும், முத்துப்பேட்டை அருகே சதுப்புநிலக்காடுகளும் உள்ளன. மண்ணை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் குறித்து 4 மணி நேரத்திற்கு ஒருமுறை ஆய்வுசெய்யப்படுகிறது.
கடலில் எடுக்கப்படும் தண்ணீரின் தன்மை, காலநிலை மாற்றம், உப்புத் தன்மை போன்றவை கணக்கீடு செய்யப்படுகிறது. கடல்மட்டத்தில் இரண்டு மீட்டர் ஆழம் முதல் 5 மீட்டர் ஆழம் வரையில் சோதனைகள் செய்யப்படுகின்றன.
கடந்த ஜூன் மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆய்வில் இப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றுதெரியவந்துள்ளது. வரும் 15ம் தேதி சேது சமுத்திர திட்டம் குறித்த கருத்தரங்கம் மதுரையில் நடக்க உள்ளது.
40 வல்லுனர்கள், மத்திய சுற்றுச்சூழல் துறையின் 3 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். அண்ணாமலைபல்கலைக்கழகம், தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை பங்கேற்க உள்ளன.
இன்று முதல் சேது சமுத்திர திட்டத்திற்கு 7,500 கன மீட்டர் மண்ணை அப்புறப்படுத்தும் பெரிய கப்பல் பணியில் ஈடுபடும்.இதனால், 20 மாதத்திற்குள் இப்பணிகள் முடிவுக்கு வரும் என்றார் டி.ஆர்.பாலு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications