நானும் என் ஓட்டுனர்களும் - கருணாநிதியின் கசந்த நினைவுகள்!
சென்னை:
என்னிடம் முன்பு ஓட்டுனர்களாக இருந்தவர்களால் பல சோதனைகளை நான் சந்தித்துள்ளேன் என்று தனது கடந்த கால"கசந்த நினைவுகளை சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலகலப்புடன் பகிர்ந்துகொண்டார்.
என்னிடம் பல ஓட்டுனர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். சோதனையான நேரங்களில் கூட இருப்பவர்கள் தான் உண்மையானநண்பர்கள், உண்மையான விசுவாசிகள். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளில் எல்லாம் பெரியசோதனை எனக்குக் கிடைத்த ஓட்டுனர்களும், அவர்கள் கொடுத்த சோதனைகளும் தான்.
1976ம் ஆண்டு. மிசாவை கடுமையாக கழகம் எதிர்த்துக் கொண்டிருந்த நேரம். மிசாவை எதிர்த்தோம் என்பதற்காக ஏறத்தாழ500 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டிருந்தார்கள். பலர் கைதாவதற்காகத் தேடப்படுகிறார்கள்.
அப்போது என்னிடம் 2 ஓட்டுனர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கையில் கட்டுடன் எனது வீட்டிற்கு வந்தார். கீழேவிழுந்து விட்டேன், என்னால் இனிமேல் கார் ஓட்ட முடியாது என்றார். நான் அவரைக் கோபித்துக் கொள்ளவில்லை, சரி,போய் சிகிச்சை எடுத்துக் கொள் என்று அனுப்பி வைத்தேன்.
எனக்குத் தெரியும், அவர் இனிமேல் என்னிடம் கார் ஓட்ட வர மாட்டார் என்று. அதேபோல அதற்குப் பிறகு அவரை நான்பார்க்கவே இல்லை. இதேபோல இன்னொரு ஓட்டுனர். அப்போது அண்ணா அறிவாலயம் கட்டப்படவில்லை. அன்பகத்தில்தான் கழகம் இயங்கி வந்தது.
அந்த ஓட்டுனர், இரவு 8 மணிக்கு அன்பகத்திலிருந்து என்னை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினார். திடீரென,இப்போது அறிவாலயம் உள்ளதே அந்த இடத்திற்கு அருகே கொண்டு வந்து காரை நிறுத்தினார்.
கீழே இறங்கி, இத்துடன் பணியிலிருந்து விலகிக் கொள்கிறேன், விடைபெற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். அவருக்கும்நெருக்கடி நிலை பயம் தான். சரியென்று அவருக்கு விடை கொடுத்த விட்டு, நல்ல வேளையாக எனக்கு கார் ஓட்டத் தெரியாதகாரணத்தால், வாடகைக் கார் பிடித்து வீட்டை சென்றடைந்தேன்.
இதைச் சொல்வதற்குக் காரணம், எதிர்காலத்தில் இப்படியொரு நிலை வர நேரிட்டால் தம்பி ரமேஷோ அல்லது இன்னொருஓட்டுனரான தம்பி சஞ்சீவியோ என்னை விட்டுப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கின்றது.
அந்த நம்பிக்கையின் காரணமாகத் தான் இன்று நேரில் வந்து வாழ்த்தியுள்ளேன். கலைவாணர் என்.எஸ்.கே.விடம் ராஜு என்றஓட்டுனர் இருந்தார். அவ்வளவு விசுவாசமாக பணியாற்றினார். சுமார் 25 ஆண்டுகாலம் ஒரு சிறு விபத்து கூட இல்லாமல்கலைவாணரிடம் ஓட்டுனராக இருந்து வந்தார்.
இதன் காரணமாக அவரை கலைவாணர் விழா எடுத்துச் சிறப்பித்தார். வாணி மஹாலில், விழா நடத்தி வெள்ளி விழா ஓட்டுனர்என்று அந்த ஓட்டுனருக்கு விருதும், பரிசுகளும் கொடுத்துக் கெளரவித்தார்.
இப்படியெல்லாம் ஓட்டுனர்களை உற்சாகப்படுத்துகின்ற கடந்த கால வரலாறுகள் நிறையவே இருக்கின்றன. அத்தகையஓட்டுனர்களோடு பழகும் வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications