குழந்தைகளுக்கு தமிழில் பெயர்: வைரமுத்து விருப்பம்
சென்னை:
தமிழ் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து விருப்பம் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது 53வது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். கவிஞர் திருநாளாக இதை அவர்கொண்டாடினார். இதையொட்டி சென்னை டிரஸ்ட்புரத்தில் உள்ள வைரமுத்துவுக்குச் சொந்தமான பொன்மணி மாளிகையில்நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கவிஞர் காசி ஆனந்தன், இன்குலாப் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற காசி ஆனந்தன், இன்குலாப்ஆகியோரை வாழ்த்தி கவிஞர் ஈரோடு தமிழன்பன், நீதிபதி கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் வைரமுத்து பேசுகையில், இங்கு வழங்கியது தான் நான் பெறும் முதல் விருது என்று இன்குலாப் கூறியபோதுஎனது கண்களின் ஓரம் கண்ணீர் தேங்கியது. இதுவே எனது கடைசி விருதாகவும் இருக்கலாம் என்று அவர் கூறிய போதுஉடைந்தே போனேன்.
அதே போல, எத்தனையோ சபைகளில் தான் நிராகரிக்கப்பட்டதாக காசி ஆனந்தன் கூறினார். அதற்காக நான்வெட்கப்படுகிறேன், மன்னிப்பு கேட்கிறேன். அவர் எழுதிய கவிதை வேண்டும், அவர் வேண்டாமா? சூடு வேண்டும், நெருப்புவேண்டாமா?
தண்ணீர் வேண்டும், மழை வேண்டாமா? கவிதையும், கவிஞனும் சேர்ந்தே மதிக்கப்பட வேண்டும். நாங்கள் எல்லாம் கொஞ்சம்சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் இந்த இரு கவிஞர்களும் கொஞ்சம் கூட கொள்கையிலிருந்து விலகாதவர்கள். சமரசம்செய்து கொள்ளாதவர்கள்.
இந்த நேரத்தில் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டவேண்டும். அதேபோல திரைப்படங்களுக்கும் தமிழிலேயே பெயர் வைக்கப்பட வேண்டும். இதைத் தமிழன் தான் செய்யமுடியும் என்றார். வைரமுத்து.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து ஆசி பெற்றார் வைரமுத்து. அதேபோல,மெரீனா கடற்கரையில் உள்ள கம்பன், இளங்கோவடிகள், பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், வீரமாமுனிவர் மற்றும்கண்ணதாசன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாலையில் நடந்த பாராட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார், பின்னணிப் பாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் வித்யாசாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications