பொன்னாடை வேண்டாம், பணம் தாருங்கள்: ராமதாஸ்
சென்னை:
தேர்தல் நேரம் நெருங்குவதால், விழாக்களில் பொன்னாடைகள் அணிவிப்பதற்குப் பதிலாக தேர்தல் செலவுக்குப் பணமாககொடுக்கமாறு பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூஜ்யத்தில் ஆரம்பித்து 1, 4, 20 என எம்.எல்.ஏக்களையும், 4,5,6 என்று எம்.பிக்களையும், 2 மத்திய மந்திரிகள், அதில் ஒருவர்கேபினட் மந்திரி என வளர்ந்துள்ளோம்.
பாமக சந்தித்த சவால்கள், இடையூறுகள், தமிழுக்காக, தமிழர்களுக்காக செய்த போராட்டங்கள் ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறபோது, இவ்வளவு செய்திருக்கிறோமா, இன்னும் ஏதாவது செய்யாமல் விட்டுள்ளோமா என்று யோசித்தால் எதுவும்இல்லை, அவ்வளவு செய்திருக்கிறோம்.
பாமகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. பாமகவின் வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சி.
தேர்தல் காலம் நெருங்குகிறது. எனவே கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் இனி எனக்கு பொன்னாடைகளை போட வேண்டாம்.அதற்குப் பதிலாக நிதியாக தாருங்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications