தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 10,000 கோடியை தாண்டியது
சென்னை:
தமிழகத்திலிருந்து 2004-05ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட சாப்ட்வேரின் மதிப்பு ரூ. 10,000 கோடியைத் தாண்டியுள்ளது.இதையடுத்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதியில் கர்நாடகத்துக்கு அடுத்த இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
கடந்த 2000-01ம் ஆண்டில் தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி அளவு ரூ. 3,116 கோடியாக இருந்தது. 4 ஆண்டுகளில் இதுரூ. 10,000 கோடியைத் தாண்டியுள்ளது.
2004-05ம் ஆண்டில் தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி ரூ. 10,730.30 கோடியாக இருந்தது. இது 41 சதவீத வளர்ச்சியாகும்.
2003-04ல் தமிழகத்தில் சாப்ட்வேர் நிறுவனங்களின் எண்ணிக்கை 855 ஆக இருந்தது. இது 2004-05ல் 915 ஆக உயர்ந்துள்ளது.இதில் பெரும்பாலான நிறுவனங்கள் சென்னையில் தான் உள்ளன.
1996ம் ஆண்டு முதலே தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி தொடங்கி விட்டபோதிலும், கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான்இதில் பிரமிக்கத்தக்க அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்றுமதியான மென்பொருள்களில் அப்ளிகேஷன் சாப்ட்வேர் எனப்படும் பயன்பாட்டு மென்பொருள் ஏற்றுமதிஅளவு மட்டுமே 61 சதவீதம் ஆகும். பி.பி.ஓ. மூலமான ஏற்றுமதி அளவு 5 சதவீதமாகும்.
தமிழகத்தில் எழுதப்படும் சாப்ட்வேரில் அதிக அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதியாகிறது. 72 சதவீத அளவுக்குஅமெரிக்காவுக்கான ஏற்றுமதி உள்ளது. இங்கிலாந்து நிறுவனங்கள் 15 சதவீத அளவுக்கு வாங்குகின்றன.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி அளவு 4 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருந்தபோதிலும்
கர்நாடக மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
2004-05ல் கர்நநிாடகத்தின் மென்பொருள் ஏற்றுமதி அளவு ரூ. 27,600 கோடியாக இருந்தது. ஆந்திர மாநிலம் ரூ. 8,270கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications