For Daily Alerts
Just In
கருணாநிதியுடன் ராமதாஸ், எல்ஜி திடீர் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து திமுக நடத்திய சில கூட்டணிக் கூட்டங்களை ராமதாஸ் புறக்கணித்து வந்தார்.
இந் நிலையில் ராமதாஸ் திடீரென நேற்று கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் பாமகதலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்கான பின்னணி குறித்து இரு கட்சியினரும் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதேபோல, கருணாநிதியை அவ்வப்போது தாக்கி வரும் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும் கருணாநிதியை அவரதுஇல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இச் சந்திப்பு நடந்தது.
மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்தித்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் எல்.கணேசன் தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, July 18, 2005, 5:30 [IST]