காவிரி: அதிமுக மாநிலம் தழுவிய போராட்டம்
சென்னை:
காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து 22ம் தேதி தமிழகம் முழுவதும்அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை ஒருபோதும் கர்நாடக அரசு முறையாக அமல்படுத்தியதில்லை. ஒவ்வொருஆண்டும் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை.
அணை நிரம்பினால் மட்டுமே, உபரி நீரை தமிழகத்திற்குத் திறந்து விடுகிறது கர்நாடக அரசு.
தற்போது கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது. கபிணி அணை நிரம்பி வழிகிறது.இருப்பினும் உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டு வருகிறது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தி, உடனடியாக தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.
தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகம் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் அமைதியானமுறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 22ம் தேதி பகல் 12 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள மத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்திற்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள் தலைமை வகிப்பார்கள். கட்சியினர்அனைவரும், பொது மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications