ஜோதிடரின் அறிவுரை: 9 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை!
கோவை:
கோவை பீளமேடு அருகே உடையாம்பாளையம் என்ற இடத்தில் ஜோதிடரின் அறிவுரையைக் கேட்டு 9 மாதக் கைக்குழந்தையை தாறுமாறாக அடித்து, தரையில் தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
உடையாம்பாளையம் பகுதியில் சிறிய அளவிலான சிற்றுண்டி விடுதி நடத்தி வருபவர் ரகுபதி. பொள்ளாச்சியைச் சேர்ந்தசந்திரகலா என்பவருக்கும், ரகுபதிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. விக்னேஷ் என்று குழந்தைக்குப் பெயரிட்டிருந்தனர்.
ரகுபதி ஜோதிடத்தை அதிகம் நம்புபவர். எதைச் செய்வதாக இருந்தாதலும் ஜோதிடரின் ஆலோசனைப்படிதான் செய்வாராம்.சமீபத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஜோதிடம் கூறும் ஒருவரிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார்.
அதற்கு அந்த முட்டாள் ஜோதிடர், உனது குழந்தையால் உனக்கு ஆபத்து உள்ளது. எனவே நீ உனது மகனை விட்டுப் பிரியவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளானார் ரகுபதி. குழந்தை மீது அவருக்கு வெறுப்பு வரத் தொடங்கியது. மனைவியிடமும்,இவன் என்னைக் கொல்ல வந்த எமன் என்று கூறி மகனைத் திட்டி வந்துள்ளார்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை குழந்தையை வெளியில் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். ஆனால் கணவன் குழந்தை மீதுவெறுப்பாக இருப்பதை அறிந்திருந்த சந்திரகலா, குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் குழந்தையை வலுக்கட்டாயமாக மனைவியிடமிருந்து பிடுங்கிய ரகுபதி குழந்தையைதாறுமாறாக அடித்துள்ளார். 9 மாதமே ஆன அந்த பிஞ்சுக் குழந்தை வலியில் கதறித் துடித்துள்ளது.
இதையடுத்து ஆக்ரோஷத்துடன் அந்தக் குழந்தையை தரையில் தூக்கி வீசி பலமாக அடித்துள்ளான் தந்தை ரகுபதி. இதில்அப்பாவிப் பிஞ்சு அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தது.
தனது கண் முன்பே குழந்தையை ரகுபதி கொடூரமாக அடித்துத் துவைத்ததைப் பார்த்த சந்திரகலா மயங்கி விழுந்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டினர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்,குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரகுபதியைக் கைது செய்தனர். அவருக்கு அறிவுரை கூறிய ஜோதிடர்தலைமறைவாகி விட்டான். அவனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications