ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
சென்னை:
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், சூர்யா மற்றும் அஜீத் ஆகியோர் நடித்த படங்களை 3ஆண்டுகள் கழித்தே டிவியில் ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும்வினியோகஸ்தர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கமல், ரஜினி, விக்ரம், விஜய், சூர்யா, அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படங்கள் நன்றாக இருந்தால் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களைபார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இந் நிலையில் இந்த முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை வாங்க டிவி நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றன(முக்கியமாக சன் டிவி). சில தயாரிப்பாளர்கள் அந்தப் படங்களை உடனடியாக நல்ல விலைக்கு டிவிக்களுக்கு விற்றுவிடுகிறார்கள்.
இதனால் என்ன ஆகிறது என்றால், படத்தை வாங்கிய டிவி நிறுவனங்கள், அந்தப் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்போதே டிவியிலும் ஒளிபரப்பி விடுகின்றன. இதனால் தியேட்டர்களில் வசூல் மிகக் கடுமையாகபாதிக்கப்படுகிறது.
எனவே ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை 3 வருடங்கள் கழித்தே டிவியில் ஒளிபரப்ப அனுமதிப்பதுஎன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சத்யராஜ், மாதவன், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களை ஒரு ஆண்டு கழித்து டிவியில் ஒளிபரப்பஅனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications