பஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்குமா?: பேச்சு முடிந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய நிர்ணயத்தை மாற்றி அமைப்பது தொடர்பான முதல் கட்டபேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.

மாநில போக்குவரத்துத் துறைச் செயலாளர் கற்பூர சுந்தரபாண்டியன் தலைமையிலான தமிழக அரசு அதிகாரிகளும், 16போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

பல்வேறு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து திமுகசார்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் இந்தப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், காங்கிரஸ் சார்பான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி. ஆகிய 3 தொழிற் சங்கங்களின்பிரதிநிதிகள் மட்டுமே முழுமையான அளவில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

கடந்த 2 நாள் பேச்சுவார்த்தையில் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தன. அரசுஊழியர்களுக்கு இணையான ஊதியம், அடிப்படை ஊதியத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்வு,

தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரமாக்குவது, போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பது, மினிபஸ்களை அரசு போக்குவரத்துக் கழகங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+