எகிப்தில் தொடர் குண்டு வெடிப்பு: 83 பேர் பலி
ஷார்ம்-எல்-ஷேக் (எகிப்து):
எகிப்து நாட்டில் நடந்த தொடர் கார் வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 75 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 150க்கும்மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20ல் ஆரம்பித்து இப்போது 83 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரெட் சீ பகுதியில் இது டூரிஸ்ட் சீசன் ஆகும். இதனால் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அங்கு குவிந்துள்ளனர்.
இந் நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது. மொத்தத்தில் 7 குண்டுகள் வரை வெடித்தன. இதில் 4 குண்டுகள் கார்களில்வைக்கப்பட்டிருந்தன. கார்களில் வந்த 4 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்து தாங்களும்வெடித்துச் சிதறினர்.
இதில் ஒரு கார் ஹோட்டலின் மீது வந்து மோதி வெடித்தது. இதில் அந்த ஹோட்டல் வெடித்து தூள் தூளானது.
இன்னொரு கார் வெடி குண்டு சில கி.மீ. தொலைவில் உள்ள மார்கெட் பகுதியில் வெடித்தது. இதில் அந்த இடத்திலேயே 17 பேர்பலியாயினர். அங்கு நின்றிருந்த 3 பஸ்களும் சிதறிப் போயின.
எகிப்து நேரப்படி நள்ளிரவு 1.15 மணியளவில் இந்தத் தாக்குதல்கள் நடந்தன. குண்டுகள் வெடித்த பகுதிகள் முழுவதும்உடல்கள் சிதறிக் கிடக்கின்றன.
பலியானவர்களில் பிரிட்டன், டென்மார்க், செளதி, குவைத், ரஷ்ய, கத்தார் சுற்றுலாப் பயணிகள் அடக்கம்.
இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அப்துல்லா அஸ்ஸாம் பிரிகேட் என்ற தீவிரவாத அமைப்புபொறுப்பேற்றுள்ளது.
இராக், ஆப்கானிஸ்தான், செசன்யாவில் நடந்து வரும் சர்வதேச அநீதிக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத்தாக்குதலில் யூதர்கள் உள்ளிட்டவர்களை பழி தீர்த்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications