மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து விநாடிக்கு 45,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் ஹோகனேக்கல்அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறுவெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் தெற்குப் பகுதி மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் முக்கிய அணைகள்நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜ சாகர் அணை மட்டுமே இன்னும் நிரம்பாமல் உள்ளது. அதுவும் இன்னும் சில தினங்களில்நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 124 அடியாகும். அங்கு தற்போது 105 அடி நீர் இருப்பு உள்ளது.அணைக்கு விநாடிக்கு 34,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஹோரங்கி அணையின் கொள்ளளவு 129 அடியாகும்.அங்கு 127 அடி நீர் இருப்பு உள்ளது.

அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஹேமாவதி அணைக்கும் விநாடிக்கு 26,700 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

தொடர் கன மழை காரணமாக கபினி அணையிலிருந்து விநாடிக்கு 45,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத்தண்ணீர் தற்போது மேட்டூரை அடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரியின் தமிழக நுழைவுப் பகுதியான ஹோகனேக்கல்நீர்வீழ்ச்சியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கும், மீன் பிடிக்க, படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீஸார்உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும்மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் மேட்டூர் அணை நிரம்பும்வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணையில் தற்போது 75 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 14,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+