விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி: சிதறி விழுந்த பாகங்களால் ஆபத்து?
ஹூஸ்டன்:
அமெரிக்க வீரர்களுடன் வானில் செலுத்தப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் (ஷட்டில்) இருந்து ஒரு வெளிப்புறபாதுகாப்பு ஓடு (டைல்) கழன்று விழுந்தது. அதே போல ஓடத்தில் இருந்து மிகப் பெரிய இன்னொரு பொருளும் கழன்றுவிழுந்தது.
![]() |
| விண்ணில் பாயும் டிஸ்கவரி |
2003ம் ஆண்டு பிப்ரவரியில் கொலம்பியா விண்வெளி ஓடம் தரையிறங்கும் வெடித்துச் சிதறியதற்கு அதிலிருந்த வெப்பம்தாங்கும் ஓடு சேதமடைந்தது தான் காரணம் என்பது நினைவுகூறத்தக்கது. அந்த விபத்தில் கல்பனா சாவ்லா உள்பட 7அமெரிக்க வீரர்கள் பலியாயினர்.
இதையடுத்து ஷட்டில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதையே அமெரிக்கா நிறுத்தி வைத்துவிட்டது. விண்கலங்களைமீண்டும் மேம்படுத்தி நேற்று தான் முதன்முறையாக மீண்டும் டிஸ்கவரி கலத்தை செலுத்தியது.
இந்த விண்கலம் ஏவப்படும்போது அதை இரு அதிவேக போர் விமானங்கள், 100க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்தடெலஸ்கோப்புகள், விண்வெளி ஓடத்தின் வெளியில் உள்ள கேமராக்கள் ஆகியவற்றைக் கொண்டு அனைத்து கோணங்களில்இருந்தும் நாஸா வீடியோ எடுத்தது.
![]() |
| சிதறி விழும் பாகம் வட்டத்துக்குள் |
விண்கலம் தரையிறங்கும்போது பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்படும் உராய்வினால் உருவாகும் ஆயிரக்கணக்கான டிகிரிசெல்சியஸ் வெப்பத்தைத் தாங்கி பத்திரமாக விண்கலம் தரையிறங்க இந்த ஓடுகள் உதவுகின்றன. கொலம்பியா விண்கலம்செலுத்தப்படும்போதே ஒரு ஓடு சேதமடைந்தது.
சேதமடைந்த ஓட்டுடன் அந்தக் கலம் தரையிறங்கியபோது தான் கலம் வெப்பத்தால் வெடித்துச் சிதறியது.
இப்போதும் 3.8 செ.மீ. நீளம் கொண்ட சிறிய ஓடு ஏவப்படும்போதே கழன்று விழுந்துள்ளது. அதே போல இன்னொரு பெரியவிண்கலத்தில் இருந்து பெரிய அளவிலான பொருளும் கீழே விழுந்தது. அது என்னவென்று இதுவரை அடையாளம்காணப்படவில்லை.
விண்கலத்துக்கு எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை இன்று அதிலுள்ள விண்வெளி வீரர்கள் ஆராய உள்ளனர்.ரோபோட் ஆர்ம் உதவியுடன், அதிலுள்ள கேமராவைக் கொண்டு வீரர்கள் ஆய்வு செய்வர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த விண்வெளிக் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும்.
விண் கலத்துக்கு அதிகமாக சேதம் ஏதும் ஏற்பட்டிருப்பது தெரிந்தால், அதிலுள்ள வீரர்கள் விண்வெளி நிலையத்தில் தங்கவைக்கப்படுவர்.
இதையடுத்து வேறு விண்கலம் அனுப்பப்பட்டு அவர்கள் பூமிக்கு கொண்டு வரப்படுவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications