மும்பை:ரன்வேயை விட்டு விலகி ஓடிய விமானம்- 335 பயணிகள் உயிர் தப்பினர்
மும்பை:
பெங்களூரில் இருந்து மும்பை சென்ற ஏர்-இந்தியாவின் போயிங் 747-400 விமானம் தரையிறங்கும்போது ரன்வேயில் இருந்துவழுக்கி, அதை விட்டு விலகி ஓடி மண்ணில் புதைந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை. இச் சம்பவத்தையடுத்து மும்பை விமான நிலையம்மூடப்பட்டது.335 பயணிகளுடன் இன்று காலை மும்பையில் தரையிறங்கிய அந்த விமானம் பின்னர் பிராங்க்பர்ட் வழியாக சிகாகோ செல்லஇருந்தது.
இரு தினங்களுக்கு முன் கடும் மழை காரணமாக மும்பை விமான நிலையத்திலும் வெள்ளம் புகுந்தது. ரன் வேயிலும் நீர் நிறைந்துநின்றதால் விமான நிலையம் மூடப்பட்டு நேற்று தான் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.
இந் நிலையில் இன்று காலை 7 மணியளவில் பெங்களூரிலிருந்து வந்த விமானம் தரையிறங்கியபோது, ரன் வேயை விட்டுவிலகி தாறுமாறாக ஓடியது. வழுக்கியபடி, ரன்வேயின் விளக்குகளை உடைத்துக் கொண்டு ஓடிய அந்த விமானம் கடைசியில்மண்ணில் புதைந்து நின்றது.
இதில் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதைந்தன.
இதையடுத்து ஆம்புலன்ஸ்களும், அவசர உதவிக்கான வாகனங்களும் விரைந்து வந்தன. உடனடியாக விமானத்தில் இருந்த335 பயணிகளும் அவசரம், அவசரமாக பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்ததை தொடர்ந்து மும்பை விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனால்மும்பைக்கு வரவேண்டிய அனைத்து விமானங்களும் வேறு இடத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications