மதுரை: பின்னோக்கி ஓடி சுவரை உடைத்த ரயில்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி தானாக பின்னோக்கி ஓடியதில் சுற்றுச்சுவர் இடிந்தது.
டெல்லியிலிருந்து மதுரை வந்த நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்புக்காக ரயில்வே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இன்று பிற்பகல் ரயில் பெட்டிகளில் ஒன்று திடீரென பின்னோக்கி ஓடத் தொடங்கியது. சிறிது தூரம் ஓடிய ரயில் பெட்டிஅங்குள்ள சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
ரயில் பெட்டியின் பிரேக் விடுபட்டதால் தான் பெட்டி பின்னோக்கி சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தவிபத்தில் யாரும் காயமடையவில்லை.












Click it and Unblock the Notifications