சுருட்டல் மன்னன் கிருஷ்ணசாமிக்கு 6 நாள் போலீஸ் காவல்
சென்னை:
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி போல நடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மிரட்டி லட்சக்கணக்கில் பணம்பறித்ததாக கைதாகியுள்ள கிருஷ்ணாசாமி மிகப் பெரும் மோசடிப் பேர்வழி எனத் தெரிய வந்துள்ளது. அவரை 6 நாள் காவலில்சிபிசிஐடி போலீஸார் எடுத்துள்ளனர்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி என்று கூறிக் கொண்டு தமிழக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான லீனா நாயர்,ஜக்மோகன் சிங் ராஜு ஆகியோருக்கு கிருஷ்ணசாமி கடிதம் எழுதி குறிப்பிட்ட வேளாண்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்டார்.அவரது கடிதத்தால் சந்தேகப்பட்ட அதிகாரிகள் இருவரும் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், கிருஷ்ணசாமியின் கடிதம் போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கிருஷ்ணசாமி பெங்களூரில் வைத்து மடக்கப்பட்டார். சென்னைக்குக் கொண்டு வந்தஅவரை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் கிருஷ்ணசாமியை ஒரு வார போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து 7 நாள்காவலில் செல்கிறீர்களா என்று கிருஷ்ணசாமியிடம் நீதிபதி அருள்ராஜ் கேட்டார்.
அதற்கு கிருஷ்ணசாமி, நான் சட்டம் படித்துள்ளேன். பெங்களூர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். கர்நாடகஉயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளேன். நானே இந்த வழக்கில் வாதாடுவேன்.
7 நாள் காவல் எல்லாம் கொடுக்கக் கூடாது. ஒரு நாள் மட்டுமே கொடுக்க வேண்டும். எனக்கு வியாதிகள் உள்ளன. என் மீதுபோடப்பட்டுள்ளது பொய் வழக்கு. எனக்குத் தேவையான மருந்துகளைக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதை மனுவாக கொடுக்கும்படி கிருஷ்ணசாமிக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அங்கேயே ஒரு மனுவை எழுதிகிருஷ்ணசாமி, நீதிபதியிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணசாமியை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கநீதிபதி அனுமதி அளித்தார்.
அதன்பின்னர் கிருஷ்ணசாமியை சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணையைத்தொடங்கினர். கிருஷ்ணசாமிக்கு ரூ. 1லட்சம் கொடுத்து இந்த மோசடிச் செயலில் ஈடுபட வைத்ததாக கைதாகியுள்ள தர்மபுரிவேளாண்துறை இணை இயக்குனர் கண்ணனும் ஏற்கனவே போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
கண்ணன் மற்றும் கிருஷ்ணசாமி இருவரையும் ஒரே அறையில் வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. கண்ணனின் போலீஸ்காவல் புதன்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கிருஷ்ணசாமியின் சுருட்டல் வேலைகள் படிப்படியாக வெளியாகி வருகிறது. ஏகப்பட்ட இடத்தில் அவர் தனதுமோசடிகளைச் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ரிசர்வ் வங்கிக் கிளையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் போல மோசடியாகப் பேசி ரூ. 20லட்சம் பணத்தை அவர் சுருட்டியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக போபால் நகரில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளதாம்.
இதேபோல, பாண்டிச்சேரியிலும் ஒரு வங்கியில் ரூ. 12 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.பெங்களூரில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏராளமான விலை உயர்ந்த பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அவருக்குகெளரி என்ற காதலி இருந்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு ஏராளமான பணத்தையும், பொருட்களையும் தனதுமோசடிப் பணத்திலிருந்து அள்ளி விட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கெளரியையும் விசாரிக்க போலீஸார்முடிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications