கொள்ளையர் கூடாரமாக மாறும் காவல்துறை: ஸ்டாலின் தாக்கு
கன்னியாகுமரி:
காவல்துறையே கொள்ளையர்களின் கூடாரமாக மாறும் வகையில் தமிழக்ததில் ஆட்சி நடந்து வருகிறது என திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறினார்.
கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சொல்லும்படி இல்லை. எதிர்க் கட்சிகளை பொய் வழக்குப் போட்டு பழி வாங்கும்வேலையைத் தான் காவல்துறை செய்து வருகிறது. காவல்துறையே கொள்ளையர்களின் கூடாரமாக மாறும் வகையில் தான்ஆட்சியே நடந்து வருகிறது.
முதலில் ரத்து செய்த திட்டங்களை தேர்தலை முன்னிட்டு மீண்டும் அறிவிக்கிறார் ஜெயலலிதா. அதையும் புதிய திட்டம் போலஅறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார். இன்னும் நிறைய அறிவிப்புகள் வெளியாகலாம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிகொடுப்போம் என்று கூட அறிவிப்பார்கள். எல்லாமே தேர்தல் நேரத்து அறிவிப்புகள்.
இதை நம்பி மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அது அப்படியே சட்டமன்றத் தேர்தலிலும்தொடரும்.
தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கோர்ட்டுக்கே செல்லாமல் தவிர்த்து வருகிறார் ஜெயலலிதா. இதிலிருந்தே அவரதுபலவீனம் வெளிப்பட்டுவிட்டது. குற்றம் செய்யவில்லை என்றால் கோர்ட்டுக்குப் போய் அதை நிரூபிக்கலாமே.
மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்தோம் என்று சொல்லி என்னையும் கருணாநிதியையும் நள்ளிரவில் கைது செய்தார்கள். 4ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்று வரை அதில் குற்றப் பத்திரிக்கைக் கூட தாக்கல் செய்யவில்லை. இதிலிருந்தே அதுமுழுக்க முழுக்க பொய் வழக்கு என்பது நிரூபனமாகிவிட்டது என்றார் ஸ்டாலின்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications