மோசமான வானிலை: நாளை தரையிறங்குகிறது டிஸ்கவரி
ஹூஸ்டன்:
மோசமான வானிலை காரணமாக டிஸ்கவரி விண்கலம் நாளை தரையிறங்கும் என்று நாஸா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 26ம் தேதி டிஸ்கவரி விண்கலம் விண்ணுக்குச் சென்றது. ஏவப்பட்டபோது இந்த ஓடத்தின் வெப்பம் தாங்கும்தகடுகளில் ஒரு பகுதி சேதமடைந்தது.மேலும் டிஸ்கவரியின் இரு இடங்களில் வெப்பம் தாங்கும் தகடுகளுக்கு இடையே உள்ள வெப்பம் தாங்கும் ரீ-இன்போர்ஸ்ட்கார்பன்-கார்பன் நூலிழைகள் வெளியில் வந்தன.
டிஸ்கவரியின் வீரர்கள், விண்வெளியில் 3 முறை நடந்து துருத்திக் கொண்டிருந்த நூலிழைகள் அகற்றினர். ஆனால்,சேதமடைந்த வெப்பத் தகடுடனேயே டிஸ்கவரி தரையிறங்கலாம் என நாஸா விஞ்ஞானிகள் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.
இதையடுத்து டிஸ்கவரி இன்று தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று பகலில் 7 விண்வெளிவீரர்களுடன் டிஸ்கவரி பூமியின் சுற்றுப் பாதையை நோக்கி நகன்றது.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.16 மணிக்கு புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் டிஸ்கவரிதரையிறங்கும் என நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக 90 நிமிடங்கள் தாமதமாக டிஸ்கவரி தரையிறங்கும் என்று இன்றுஅறிவிக்கப்பட்டது. அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 2.17க்குப் பதிலாக 3.51க்கு தரையிறங்கும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது டிஸ்கவரி விண்கலம் இன்று தரையிறங்காது என்று நாஸா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். நாளை இந்தியநேரப்படி பிற்பகல் 2.38 மணிக்கு தரையிறங்கும் என்று நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்ப பாதுகாப்பு ஓடுகளில் ஏற்பட்ட சேதம், பூமியில் நிலவும் மோசமான வானிலை ஆகிய ஆபத்துகளை மீறி, அதுதரையிறங்க வேண்டியுள்ளது. இதனால், நாஸா விஞ்ஞானிகள் பெரும் பதட்டத்தில் உள்ளனர்.
கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி கொலம்பிய ராக்கெட் விண்வெளியிலிருந்து வாயு மண்டலத்திற்குள் நுழையும் போதுஏற்பட்ட கோளாறில் தான் எரிந்து சாம்பலானது. இதில் கல்பனா சாவ்லா உட்பட 7 பேர் கருகி இறந்தனர்.
இது போன்ற சம்பவம் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாசா விஞ்ஞானிகள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications