ஒ.பி. காரை வழிமறித்த காட்டு எருமை!
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்த காரை காட்டு எருமை ஒன்றுவழிமறித்தது. இருப்பினும் தனது வழியில் காட்டு எருமை சென்று விட்டதால் அமைச்சரும், உடன் வந்தவர்களும் எந்தஆபத்தும் இன்றித் தப்பினர்.
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள போளூர், பூண்டி,கவுஞ்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றனர். அங்கு பொதுமக்களிடம் குறை கேட்ட அவர்கள், பின்னர் பெரியகுளம்திரும்புவதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.வழியில், பூம்பாறை சாலை என்ற இடத்தில் குண்டாறு அருகே ஒரு காட்டு எருமை கார் முன்பாக திடீரென வந்தது. இதைப்பார்த்த கார் ஓட்டுநர் காரை உடனடியாக நிறுத்தினார்.
காரை சிறிது நேரம் உற்றுப் பார்த்த காட்டு எருமை பின்னர் தன் வழியே மலைப் பகுதிக்குள் சென்று மறைந்தது. காட்டு எருமைஏதும் செய்யாமல் சென்றதால் அமைச்சர் உள்ளிட்டோர் தப்பினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications