மதுக் கடைகளை மூடக் கோரி பாமக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு மதுக் கடைகளை மூடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் மகளிர் அணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தின்போது பேசிய ஜி.கே.மணி, அரசு மதுக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.உற்பத்தியைப் பெருக்க வேண்டிய அரசு, விவசாயத்தை பெருக்க வேண்டிய அரசு, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியஅரசு, சாராய உற்பத்தியை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் பெண்கள் மது அருந்துவது அதிகரித்து வருவதாக அரசு அதிகாரிகளே புள்ளி விவரத் தகவலை தெரிவிக்கும்அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார் மணி.












Click it and Unblock the Notifications