மேட்டூர், வீரப்பன் சமாதியில் சுற்றுலாக் கூட்டம்!
மேட்டூர்:
மேட்டூர் அணையில், தண்ணீர் கடல் போல காட்சி அளிப்பதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் பார்வையிடுவதற்காககுவிந்து வருகின்றனர். அங்கு வருபவர்கள் அருகில் உள்ள மூலக்காடு காட்டுக் கிராமத்திற்கு சென்று வீரப்பன் புதைக்கப்பட்டஇடத்தையும் பார்வையிடுகிறார்கள்.
மேட்டூர் அணை நீண்ட காலத்திற்குப் பிறகு நிரம்பும் நிலைக்கு வந்துள்ளது. அணையில் தற்போது 116 அடி நீர் உள்ளது. அணைநிரம்ப இன்னும் 4 அடி நீரே தேவை. இதைத் தொடர்ந்து அணையில் தேங்கியுள்ள நீர் கடல் போல காட்சி அளிக்கிறது.இதனால் மேட்டூர் அணை சுற்றுலா பயணிகளின் வருகையால் நிரம்பி வழிகிறது. அக்கம் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தஏராளமான பொதுமக்கள் மேட்டூர் அணைக்கு வந்து செல்கின்றனர். அணை நீர் கடல் போல காட்சி அளிப்பதைப் பார்த்துசந்தோஷப்பட்டு செல்கிறார்கள்.
வேன், கார்கள் என பல்வேறு வாகனங்கள் மூலம் மேட்டூர் அணைக்கு மக்கள் வந்து செல்வதால் அப்பகுதியே படு பிசியாககாணப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அப்படியே அருகே உள்ள மூலக்காடு கிராமத்திற்கும்செல்கின்றனர்.
மூலக்காடு கிராமத்தில் தான் ஒரு காலத்தில் சந்தனக் காட்டு ராஜாவாகத் திகழ்ந்த வீரப்பனின் உடல் அடக்கம்செய்யப்பட்டுள்ளது. மேட்டூருக்கு அருகில் மூலக்காடு இருப்பதால் அணைக்கு வருவோர் இங்கும் வந்து செல்கின்றனர்.
வீரப்பன் சமாதியைப் பார்வையிட ஏராளமான பேர் வந்து செல்வதால் மூலக்காடு கிராமத்தில் மக்கள் நடமாட்டம்அதிகரித்துள்ளது. அவர்களில் சிலர் வீரப்பன் சமாதியில் மாலைகளும் அணிவித்து செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications