இந்திய வம்சாவழியினருக்கு விசா வழங்குவதில் புதிய முறை
டெல்லி:
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் இந்தியா வந்த பிறகு விசாவைப் பெற்றுக் கொள்ளும் முறை விரைவில்அமுல்படுத்தப்படும் என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஜகதீஷ் டைட்லர் கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் டைட்லர் கூறுகையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு வர வேண்டுமென்றால்அங்கிருந்தபடியே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தூதரகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் இவர்களுக்கு உடனடியாக விசா வழங்க முடியாத நிலை உள்ளது.இதனால் இந்தியா வம்சாவழியினருக்கு இந்தியா வருவதில் மிகவும் சிரமம் இருந்து வந்தது.
இதைப் போக்கும் விதத்தில் அவர்கள் இந்தியா வந்த பிறகு விசாவை பெற்றுக் கொள்ளும் முறை விரைவில் அமுல்படுத்ததீர்மானித்துள்ளோம்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான விசா கோரி விண்ணப்பங்கள் வருகின்றன.ஆனால் தூதரகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக உடனுக்குடன் இவர்களுக்கு விசா வழங்க முடிவதில்லை.
இதை தவிர்க்கும் விதத்தில் தான் இந்த புதிய முறையை கொண்டு வர தீர்மானித்துள்ளோம். கடந்த வருடம் இந்தியாவம்சாவழியினர் 34 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications