நிலம் ஸ்வாகா: வீராசாமிக்கு எதிராக ஆதாரம் உள்ளது என்கிறார் கராத்தே
சென்னை:
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்புள்ள 18 கிரவுண்ட் நிலத்தை திமுக பொருளாளர் ஆற்காடுவீராசாமியின் குடும்பத்தினர் அபகரிப்பு செய்ததற்கு முழுமையான ஆதாரம் இருப்பதாக மாநகராட்சி துணை மேயர் கராத்தேதியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆற்காடு வீராசாமி, தனது தம்பி மற்றும் அவரதுகுடும்பத்தினரின் பெயருக்கு மாற்றிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதை ஆற்காடு வீராசாமி மறுத்துள்ளார்.இந் நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கராத்தே தியாகராஜன் பேசுகையில், கடந்த 1995ம் ஆண்டு மே மாதம் முதல்1996ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில், அண்ணா நகரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 10 கோடிமதிப்புள்ள 18 கிரவுண்டு நிலத்தை ஆற்காடு வீராசாமியின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது தம்பி தேவராஜ் மற்றும் அவரதுகுடும்பத்தினரின் பெயருக்கு மாற்றி எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எழும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதியப்பட்டுள்ளது. பட்டாவும் பெற்றுள்ளனர். இந்தமோசடிக்கு அப்போதைய சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் முழுமையாக உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக அப்போதைய தமிழ் மாநில காங்கிரஸ் (இப்போது அதிமுகவில் உள்ளார்) கவுன்சிலர் வெற்றிவேல்,மாநகராட்சி ஆணையராளர் ராதாகிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டுள்ளார்.
அதற்கு, சம்பந்தப்பட்ட நிலம் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமானது தான் என்று ஆணையாளர் உறுதிப்படுத்தி பதில்அனுப்பியுள்ளார். எனவே அந்த நிலத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஆற்காடு வீராசாமி கூறுவதுதவறானது, பொய்யானது.
ஆற்காடு வீராசாமி, அவரது தம்பி மற்றும் குடும்பத்தினர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்டே தீருவோம் என்றார் கராத்தே தியாகராஜன்.












Click it and Unblock the Notifications