3 நாடுகள் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது இலங்கை
கொழும்பு:
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை சாம்பியனானது.
இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிஇலங்கையில் நடைபெற்றது. நேற்று இறுதிப் போட்டி நடந்தது. இதில் இலங்கையும், இந்தியாவும் மோதின.டாஸில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்கத்தில் இருந்தே இலங்கை வீரர்கள்அதிரடியாக விளையாடினர். ஜெயசூர்யா 67 ரன்களும், ஜெயவர்த்தனே 83 ரன்களும், அர்னால்டு 64 ரன்களும் குவித்தனர்.
இவர்களின் அபார ஆட்டத்தால் இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில்நெஹ்ராவுக்கு மட்டுமே விக்கெட்டுகள் கிடைத்தன. அவர் நேற்று 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற 3 விக்கெட்டுகளுமேரன் அவுட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற 282 ரன்கள் என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேவாக்கும், கங்குலியும் களமிறங்கினர். ஷேவாக்அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து கங்குலி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் 72 ரன்களிலும், யுவராஜ் 42 ரன்களிலும், கைப் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 9விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கைகோப்பையை கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது ஜெயவர்த்தனேவுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதும்ஜெயவர்த்தனேவுக்கே கிடைத்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications