சொத்து விவரம்: ஐடியலின் குடும்பத்தினரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு
திண்டுக்கல்:
ஐடியல் சுப்ரமணியத்தின் சொத்து விவரங்கள் குறித்து அவரது மனைவி, மகனிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர். மேலும் அவரது விராலிப்பட்டி ஆடம்பர பங்களாவிலும் சோதனை நடத்தப்படவுள்ளது.
சென்னை ஆதிகேசவன் பாணியில், ஏகப்பட்ட பேரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய்களைஸ்வாஹா செய்து விட்ட திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியத்தை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ள போலீஸார் சென்னையில் வைத்து தீவிர விசாரணைை நடத்தி வருகின்றனர். அவர்சேர்த்துள்ள சொத்துக்கள், எவ்வளவு பேரிடம் எவ்வளவு பணம் பெற்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதன்கிழமை மாலை முதல் நடந்து வந்த விசாரணையில் 25 பேரிடம் மோசடி செய்துள்ளதாக சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவரை விராலிப்பட்டிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விராலிப்பட்டியில் மிகப் பெரிய சொகுசு பங்களா ஐடியலுக்கு உள்ளது. இதுதவிர கொடைக்கானலிலும் அவருக்கு பங்களாக்கள்உள்ளன. அங்கும் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதைத் தவிர ஐடியல் சுப்ரமணியத்தின் மனைவி லீலாவதி, மகன் பாலாஜி, மகள் அருணாவிடம் விசாரணைநடைபெறவுள்ளது. ஐடியலுக்கு எங்கெங்கு சொத்துக்கள் உள்ளன, சொத்து மதிப்பு என்ன, வங்கிகளில் போடப்பட்டுள்ள பணவிவரம், நகை போன்ற பொருட்களின் விவரம் குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
ஐடியலின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஐடியலின் நெருங்கிய கூட்டாளிகள் விக்கி மற்றும் பவுல்ராஜ் ஆகியோரை போலீஸார்தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்களைப் பிடித்து அப்ரூவராக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications