நானாவதி விவகாரம்: ஜகதீஷ் டைட்லர் ராஜினாமா
டெல்லி:
நானாவதி கமிஷன் அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஜகதீஷ் டைட்லர் நேற்று இரவுராஜினாமா செய்தார். ராஜினாமாவை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தையொட்டி சீக்கியர்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில் சுமார்3000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையிலானகமிஷனை கடந்த 2000ம் ஆண்டு பாஜக தலைமையிலான அர சு அமைத்தது.இந்த கமிஷனின் அறிக்கையில் மத்திய அமைச்சர் ஜகதீஷ் டைட்லர் மற்றும் சில காங்கிரஸார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஜகதீஷ் டைட்லர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகதலைமையிலான எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டன.
ஆளும் கூட்டணியிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது. இதனால் மத்திய அரசுக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்னதாக டைட்லர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துபேசினார். அப்போது தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை சுட்டிக்காட்டி டைட்லர் ராஜினாமா செய்வதைத் தவிரவேறு வழியில்லை என்று பிரதமர் கூறியதாக தெரிகிறது.
இதன் பிறகு நேற்று மாலையில் டைட்லர், சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார். இதனால் டைட்லர் பதவியை ராஜினாமாசெய்வார் என்ற பேச்சு எழுந்தது.
இந் நிலையில் நேற்று இரவு டைட்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சோனியா காந்தியிடமும்,பிரதமரிடம் அவர் கொடுத்தார். பின் அந்தக் கடிதத்தை பரிந்துரை செய்து குடியரசுத் தலைவர் கலாமுக்கு பிரதமர் அனுப்பிவைத்தார்.
ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜகதீஷ் டைட்லரின் ராஜினாமவை பாஜக, அகாலி தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications