கோட்டை முன் உண்ணாவிரதம்: முத்துலட்சுமி அதிரடி!
மேட்டூர்:
நீதிபதி சதாசிவம் கமிஷனின் அறிக்கையை வெளியிடக் கோரி சென்னையில் தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப் போவதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அறிவித்துள்ளார்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, வருகிற சட்டசபைத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் ஏதாவது ஒரு அரசியல் கட்சி சார்பில்போட்டியிட விரும்புவதாகவும், அப்படி போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், சுயேச்யாைகப் போட்டியிடப்போவதாகவும் கூறினார்.இந் நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் முத்துலட்சுமி பேசுகையில், அதிரடிப்படை வீரர்களால் மலைவாழ் மக்கள்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிரடிப்படையினரின் அராஜக நடவடிக்கைகள் காரணமாக அவர்களால் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சதாசிவம் கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் இன்னும் அதுவெளியிடப்படவில்லை. 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டஆதிவாசி மழைவாழ் மக்களைத் திரட்டி புதிய அமைப்பு ஒன்றை மேட்டூரில் தொடங்கவுள்ளோம்.
சதாசிவம் கமிட்டி அறிக்கையை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆதிவாசிகளைத் திரட்டி சென்னையில்தமிழக அரசின் தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறோம்.
நான் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் மேட்டூரில் போட்டியிடுவேன். அந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. அரசியல்கட்சிகள் எனக்கு சீட் கொடுத்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவேன். வீரப்பன் எனக்குபெரும் சக்தியாக இருந்து வழி நடத்துவார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications