அமைதி முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு: நார்வே கவலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரின் கொலைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான்,அமைதிப் பேச்சுவார்த்தைகளை மத்தியஸ்தம் செய்து வரும் நார்வே, இந்தியா, அமெரிக்கா ஆகியவை கடும் கண்டனம்தெரிவித்துள்ளன.

கொழும்பில் மிகப் பாதுகாப்பான புல்லர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறுகையில்,

இது பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தக் கொலை மிகக் கொடுமையான கிரிமினல் செயல்.அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட ஒரு தலைவரை இலங்கை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹாக்லேண்ட் கூறுகையில், இந்தக் கொலை யார்செய்திருந்தாலும், இது அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், போர் நிறுத்தத்துத்துக்கும் விழுந்துள்ள மிகப் பெரிய அடியாகும்.

நார்வே அமைதிக் குழுவின் உறுப்பினரான எரிக் சோல்ஹைம் கூறுகையில், இந்தக் கொலையால் அமைதி முயற்சிகளுக்குபெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றார்.

கடந்த 1993ம் ஆண்டு மே மாதத்தில் அதிபர் பிரேமதாசாவின் கொலைக்குப் பின் இலங்கையில் நடந்துள்ள மிகப் பெரியஅரசியல் கொலையாகும் இது. புலிகளையும் நார்வே மூலமாக அமைதிப் பேச்சுவார்த்தையையும் சேர்த்தே எதிர்த்து வந்தகதிர்கமர், புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

2001ம் ஆண்டில் சந்திரிகா ஆட்சியை இழந்ததால் அமைச்சர் பதவியை இழந்த கதிர்காமர் தொடர்ந்து அவரது முக்கியஆலோசகராக இருந்து வந்தார். காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கதிர்காமர்,ஒரு வழக்கறிஞராவார்.

2004ம் ஆண்டில் இவரை சந்திரிகா பிரதமராக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை சந்திரிகா, மகிந்தாராஜபக்ஷேவுக்கு வழங்கிவிட்டார். கதிர்காமருக்கு வெளியுறவுத்துறை பதவியை மீண்டும் தந்தார்.

கண்டியில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பயின்ற கதிர்காமர், சிலோன் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். ஆக்ஸ்போர்டில்பி.லிட் பட்டம் பெற்ற இவர் லண்டனில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

ஜெனீவாவில் சர்வதே தொழிலாளர் அமைப்பின் ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார்.

இவரது கொலையைத் தொடர்ந்து அவசர கால நிலையை அமலாக்கியுள்ள சந்திரிகா, மக்கள் அமைதியாக இருக்குமாறுகோரிக்கை விடுத்துள்ளார். சந்திரிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது உயிருக்கு வந்த பல்வேறு மிரட்டல்களுக்குமத்தியிலும் தீவீரவாதத்தை சளைக்காமல் எதிர்த்து வந்த கதிர்காமர் ஒரு தேசிய ஹீரோ.

இனப் பிரச்சனைக்கு அமைதித் தீர்வை விரும்பாத அரசியல் எதிரிகள் தான் இந்தக் கொலையை செய்துள்ளனர் என்றுகூறியுள்ளார்.

இதற்கிடையே ராணுவ செய்தித் தொடர்பாளர் தயா ரத்னாயகே கூறுகையில், இரு தினங்களுக்கு முன் கதிர்காமரை உளவு பார்த்தஇரு விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் இந்தக் கொலை நடந்துள்ளது என்றார்.

மறைந்த கதிர்காமருக்கு சுகந்தி என்ற மனைவியும் ரெகி மற்றும் அஜிதா என்ற மகன், மகளும் உள்ளனர்.

இந்தக் கொலைக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்காண்டலீஸ்ஸா ரைய் கூறுகையில்,

இந்தக் கொலை மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதைச் செய்தவர்கள் சட்டப்படி தண்டிப்பட வேண்டும். ஆனால், இந்தக்கொலை காரணமாக இலங்கையில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார்.

இந்தப் படுகொலையை இந்தியாவும் கண்டித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா டெல்லியில்நிருபர்களிடம் பேசுகையில், இது கொடூரமான கொலை. இந்தியாவின் நெடு நாளைய நண்பரான கதிர்காமரின் மறைவால்அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்க முயலும் சக்திகளை அந் நாட்டு மக்கள் முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.இந்தக் கொலையைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு எல்லா விதத்திலும் உதவ இந்தியாஎப்போதும் தயாராக உள்ளது.

கதிர்காமரின் குடும்பத்தினருக்கு இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

இந்தக் கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டித்துள்ளது. கதிர்காமரின் மறைவால் இந்தியா ஒரு நல்ல நண்பரைஇழந்துவிட்டதாக அந்தக் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+