மீண்டும் சிறையில் ஐடியல் சுப்பிரமணி
சென்னை:
7 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின்னர் ஐடியல் சுப்ரமணியம் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரும் சிறையில்அடைக்கப்பட்டனர்.
வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பலபேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஐடியல் சுப்பிரமணியத்தை 7 நாள் போலீஸ்காவலில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் எடுத்திருந்தனர். அவரை வத்தலகுண்டு, விராலிப்பட்டி, கொடைக்கானல்ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின்போது ஏராளமான ஆவணங்களைப் போலீஸார் கைப்பற்றினர். 20க்கும் மேற்பட்ட ஐடியலின் வங்கிக்கணக்குகளை முடக்கினர். சொத்துக்கள் குறித்த பத்திரங்களையும் கைப்பற்றினர்.
போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் இன்று காலை எழும்பூர் கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் ஐடியல் சுப்பிரமணியத்தைபோலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி அருள்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து ஐடியல்,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல கைது செய்யப்பட்ட ஐடியல் சுப்பிரமணியத்தின் 2 கூட்டாளிகளில் ஒருவரான செளந்தர் என்ற செளந்தரராஜனும்எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்ததரவிட்டார்.
இன்னொரு கூட்டாளியான மணி என்ற மணிகண்டன் சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications