நாங்கள் இந்திக்கு எதிரிகள் அல்ல: கருணாநிதி
சென்னை :
இந்தி ஆதிக்கத்திற்கு மட்டுமே நாங்கள் எதிரிகள், இந்தி என்ற மொழிக்கு அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மாக்ஸிம் கார்கி ரஷிய மொழியில் எழுதிய தாய் நாவலை தாய் காவியம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்து கவிதைநடையில் எழுதினார் கருணாநிதி. இந்த நூல் தற்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.இந்த நூலின் வெளியீடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. மக்களவை சபாநாயகரும் மூத்த மார்க்சிஸ்ட்தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி இந்த நூலை வெளியிட்டார். முதல் நூலை நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், முன்னாள் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிதிபி.ஆர்.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழாவில் சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில், தமிழர்களின் வாழ்க்கையிலும், தமிழ் இலக்கியத்திலும் கருணாநிதியின் பங்களிப்புமிகப் பெரியது.. இலக்கியங்களில் அவர் தொடாத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு பங்காற்றியுள்ளார்.கோடிக்கணக்கான மக்கள் படித்துப் பாராட்டிய தாய் நாவல், கருணாநிதியின் கவிதை வரிகளில் தமிழில் வெளியாகி தற்போதுஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மூல நூலின் பொருள் மாறுபடாமல் மொழிபெயர்ப்பது கடினமானது. அதை கருணாநிதி மிகச் சிறப்பாக செய்துள்ளார் என்றார்.
கருணாநிதி பேசுகையில், எனது நூல்கள் இந்தியில் வெளி வந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன. குறளுக்குநான் எழுதிய உரை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிறுகதைகளும் ஆங்கிலம், இந்தியில் வந்துள்ளள.
இதைப் பார்த்ததும், பார் பார் கருணாநிதி நூல்கள் இந்தியில் வெளியாகின்றன என்று சிலர் கூறக் கூடும். நாங்கள் இந்திமொழியின் ஆதிக்கத்திற்குத்தான் எதிரிகளே தவிர இந்தி மொழிக்கு எதிரிகள் அல்லர். இதை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இது தாய் நூல் வெளியீடு. எனவே தாய்மார்கள் குறித்துப் பேச வேண்டும். இன்றைக்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு குறித்துஇந்தியா முழுவதும் பேசி வருகிறார்கள், நாடாளுமன்றத்திலும் பேசுகிறார்கள். பெண்களுக்கு எப்பாடு பட்டாவது,எப்படியாவது இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சுதந்திரம் வந்தபோது மொழிவாரி மாநிலங்கள் கேட்கவில்லை. அதன் பிறகுதான் மொழி வாரி மாநிலங்களைக் கேட்டோம்,பிரித்துக் கொண்டோம். அதேபோல, முதலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வரட்டும், அதற்குப் பிறகு யார் யாருக்கு எப்படிஎன்று பிரித்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்காக நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரிப்பது குறித்தும் யோசிக்கிறார்கள். நான்கூறுவது எல்லாம், எத்தனை இடம் வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் முதலில் இட ஒதுக்கீட்டை எப்படியாவதுஅமல்படுத்துங்கள் என்பது தான் என்றார் கருணாநிதி.
ப.சிதம்பரம் பேசுகையில், கலைஞரின் தாய் காவிய கவிதை நடையைப் பார்த்தபோது, இது ரஷிய மொழியிலிருந்துஉருவானதா என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். இதை தற்போது ரஷிய மொழியிலும் மொழியாக்கம் செய்து வெளியிடவேண்டும்.
தமிழ் காவியத்திற்கும், ஆங்கில மொழி பெயர்ப்பிற்கும் இடையே கடும் போட்டியே நடக்கிறது. தமிழ் மீதுள்ள பற்றால் நான்கூறவில்லை, தமிழ்தான் வென்றுள்ளது. ஆங்கிலம் ஈடுகொடுத்தும் கூட, தமிழ் மொழிக்கே வெற்றி கிடைத்துள்ளது.
1905ல் எழுதிய காவியம் போல இது தெரியவில்லை, 2005ல் எழுதப்பட்ட புதிய காவியமாகவே தோன்றுகிறது என்றார்சிதம்பரம்.
முன்னதாக மேடையில் இருந்தவர்களுக்கு ஸ்டாலின் சால்வை, மாலை அணிவித்தார். கருணாநிதியின் மகள் கனிமொழிவரவேற்புரை நிகழ்த்தினார். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.












Click it and Unblock the Notifications