குஜராத்தில் கொத்தடிமை வேலை: சென்னை ரயில் நிலையத்தில் 18 சிறுவர், சிறுமியர் மீட்பு
சென்னை:
கொத்தடிமைகளாக வேலை பார்க்க குஜராத் கொண்டு செல்லப்படவிருந்த 16 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்களை சென்னைசென்டிரல் ரயில் நிலையத்தில் போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற இவர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் தாமதமாக வந்ததால் ரயில்சென்று விட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் ரயில் நிலையத்திலேயே குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர்.இவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த ரயில்வே போலீஸார், அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுசிறுவர், சிறுமியருடன் வந்திருந்த 3 பேர், அனைவருக்கும் 18 வயதுக்கு மேலாவதாகவும், குஜராத்தில் வேலையில்சேர்ப்பதற்காக கொண்டு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் சந்தேகம் நீங்காத போலீஸார் 19 பேரையும் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பினர். சோதனையில்ஒரே ஒரு இளைஞருக்கு மட்டும் 19 வயது என்றும் மற்ற அனைவருமே 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுவர்களுடன் வந்திருந்த கேரளாவைச் சேர்ந்த ரமேஷ், காரைக்காலைச் சேர்ந்த செல்வம், நன்னிலத்தைச் சேர்ந்தசுரேஷ் ஆகிய மூன்று ஏஜென்டுகளையும் போலீஸார் கைது செய்தனர்.
19 வயது இளைஞர் அவரது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டார். மற்ற 18 பேரில், 16 சிறுமிகளை புரசைவாக்கம் அரசினர்காப்பகத்திலும், 2 சிறுவர்களை ராயபுரம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் போலீசார் தங்க வைத்துள்ளனர்.
இந்த 19 பேரும் திருவாரூர், மயிலாடுதுறை, நன்னிலம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.இவர்களில் சிலர் ஏற்கனவே குஜராத் சென்று வேலை பார்த்துள்ளனர்.
இவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications