ஜெயா டிவி கேமராமேன், நிருபருக்கு திமுகவினர் அடி, உதை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஊதிய உயர்வு தொடர்பாக திமுக சார்பு தொழிற் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தை படமெடுக்க முயன்றஜெயா டிவி நிருபரையும் கேமராமேனையும் திமுகவினர் தாக்கினர்.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். கேமராவும் சேதமடைந்தது.சென்னை பல்லவன் இல்ல தலைமை அலுவலக வளாகம் எதிரே கூடிய திமுக, கம்யூனிஸ்ட் கட்சி சார்பானதொழிற்சங்க ஊழியர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து அதிமுக, திமுக போக்குவரத்து ஊழியர்களிடையே கடும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.இதை ஜெயா டிவியைச் சேர்ந்த கேமரா மேன் மற்றும் செய்தியாளர் படம் பிடிக்க முயன்றனர்.
அப்போது திமுக தொழிற்சங்க ஊழியர்கள் அவர்கள் மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில்ஜெயா டிவி கேமராமேன் பலத்த காயமடைந்தார். அவரது கேமராவும் சேதமடைந்தது.
ஜெயா டிவியின் செய்தியாளரும் திமுக சார்பு ஊழியர்களால் தாக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications