தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஜெ
டெல்லி:
தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்தும் வகையில் மகாநதியையும் காவிரியையும் இணைக்க வேண்டும் எனமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர்,சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வது தேசியஅளவில் பேசப்படுகிறது. தமிழகத்தில் சிறுபான்மைப் பிரிவு மக்களிடையே பாதுகாப்பு உணர்வு நிரம்பியுள்ளது.
இது ஏதோ தற்செயலாக நடந்துவிடவில்லை. எனது தலைமயிலான அரசின் உறுதியாலும், அரசியல் உறுதியாலும் தான் இதுநடந்தது. இன நல்லிணக்கத்தை பராமரிப்பதில் நான் காட்டும் உறுதிப்பாடு தான் இதற்கு முக்கியக் காரணம்.
தமிழக போலீஸ் படையை நான் நவீனப்படுத்தியுள்ளேன். சட்டத்தை மீறுவோர் மீது கடுமையாகவும், அதே நேரத்தில் நலிந்தபிரிவினர், சிறுபான்மையினரிடம் மிகுந்த மனித நேயத்துடனும் செயல்படும் வகையில் போலீஸ் படையைமாற்றியமைத்துள்ளேன்.
பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும் தீவிரம் காட்டுகிறேன். இதனால் தான் பொடா சட்டம் போன்றவற்றை நீக்கக் கூடாது என்றுகூறினேன்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் பள்ளிப் பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாதி, மதவேறுபாடு இல்லாமல் 11, 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டுவந்துள்ளேன்.
தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடி வருகிறேன்.
தீபகற்ப நதியான மகாநதியை தண்ணீர் பற்றாக்குறையால் வாடும் காவிரியோடு இணைக்க வேண்டும். தேசிய உணர்வைபறைசாற்றும் வகையில் முதலில் தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications