சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட மாட்டாது: டி.ஆர்.பாலு
மதுரை:
முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தாலும், சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மத்தியகப்பல் போக்குவரத்த அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணிகளால் மீன் வளம் பெரிதும் பாதிக்கப்படுவதால் உடனடியாக அப்பணிகளை நிறுத்தவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு பேசுகையில், கடல் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது என்று விஞ்ஞானிகள்உறுதி அளித்ததன் அடிப்படையில்தான் சேது சமுத்திரத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்புவிஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
எனவே தமிழர்களின் 145 ஆண்டு கால கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்ந்து அமலாக்கப்படும். இந்தநிமிடத்தில், சேது சமுத்திரத் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அது எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது.
ஏற்கனவே 10 லட்சம் கன அடி அளவுக்கு மண் தோண்டப்பட்டு விட்டது. இப்பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடத்தப்படும்.இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட விரும்புவோர் மக்கள் மத்தியில் எடுபட மாட்டார்கள். எனவே இதுபோன்றமுட்டுக்கட்டையாளர்களுக்குப் பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.
உண்மையில் இவர்களுக்கு தமிழக நலனிலோ அல்லது தமிழக மக்களின் வளர்ச்சியிலோ உண்மையான அக்கறை இல்லை.
இதே ஜெயலலிதா, தானும், எம்.ஜி.ஆரும்தான் சேது சமுத்திரத் திட்டத்திற்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர்கள் என்றுகூறினார். அப்படிக் கூறிய அவர் இப்போது அத்திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை என்றார் டி.ஆர்.பாலு.
முன்னதாக மதுரை அருகே திருமங்கலத்தில் மதுரை முதல் விருதுநகர் வரையிலான நான்கு வழிப் பாதை திட்டத்திற்கானஅடிக்கல் நாட்டு விழாவில் பாலு கலந்து கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications