மக்கள் தலைவர் வைகோ: மன்மோகன் சிங் புகழாரம்
சென்னை:
மக்கள் கூட்டத்தின் தலைவராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திகழ்கிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகாழாரம்சூட்டியுள்ளார்.
பொடா சட்டத்தில் கைதாகி, வேலூர் சிறையில் இருந்த ஓராண்டு காலத்தில் தனக்கு வந்த மடல்கள், தான் எழுதிய கடிதங்களைத்தொகுத்து சிறையில் விரிந்த மடல்கள் என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூலாக்கியுள்ளார் வைகோ.இந்த நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை இரவு நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டுஆங்கில நூலையும், திமுக தலைவர் கருணாநிதி தமிழ் பதிப்பையும் வெளியிட்டனர்.
ஆங்கில நூலின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும், தமிழ் நூலின் முதல்பிரதியை தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், மக்கள் கூட்டத்தை வசீகரிக்கும் தலைவர்களில் ஒருவர் வைகோ. அந்தஅடிப்படையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறையில் இருந்த காலகட்டத்தில் வைகோ புத்தகம் எழுதியுள்ளார். அதுஇப்போது நூலாக வெளியிடப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக மிகவும் பொறுப்புடன் செயல்படுபவர் வைகோ. என்னிடம் எப்போது பேசினாலும், மக்கள்பிரச்சினைகள் குறித்தும், சமூக குறைபாடுகள் குறித்துமே பெரும்பாலும் பேசுவார். இதுபோன்ற தலைவரை தமிழகம் பெற்றுள்ளதுமிகவும் சந்தோஷமான விஷயம்.
சிறையில் அடைக்கப்படும் எல்லாத் தலைவர்களும் இதுபோல புத்தகம் எழுதுவதில்லை. வைகோ பலவீனமானவர் அல்லஎன்பதால் இது சாத்தியமாயிற்று. அவரது கொள்கை உறுதி, தன்னம்பிக்கை, மன தைரியம் ஆகியவற்றால் பொடா சட்டத்திற்குஎதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளார்.
ஒளிமயமான தமிழக வானில், வைகோவின் பெயரை பொன்னெழுத்துக்களால் இந்தப் புத்தகம் ஜொலிக்கச் செய்யும் என்றார் சிங்.
வைகோ பேசுகையில், தனது நூல்களை வெளியிட்ட மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.மேலும், தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி தென் மாநில மக்களின் மனங்களை குளிர வைக்க வேண்டும்என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications