செப். 10, 11ல் விநாயகர் சிலை ஊர்வலம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கவிருப்பதையொட்டி நகர் முழுவதும் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் இந்த சிலைகளை வைத்துள்ளன. மொத்தம் 570 இடங்களில்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கடலில் விநாயகர்சிலைகளைக் கரைப்பதற்காக 6 இடங்களை காவல்துறை ஒதுக்கியுள்ளது.
சிலை கரைப்பு மற்றும் ஊர்வலம் ஆகியவற்றையொட்டி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சிலைஊர்வலத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், காவல்துறை குறிப்பிட்ட வழியில்தான்ஊர்வலத்தை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு போலீஸார் இரவு, பகலாக ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications