கோவை நபர் சித்திரவதை: 15 கேரள போலீஸார் மீது வழக்கு
கோயம்பத்தூர்:
கோவையைச் சேர்ந்தவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்ததாக கேரள காவல்துறையைச் சேர்ந்த 15போலீஸார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஸ்டீபன். இவரது வீட்டுக்கு கேரள மாநிலம் பாலக்காடு போலீஸார் கடந்த 4ம் தேதிவந்தனர். கடத்தல் வழக்கு ஒன்றில் விசாரிக்க வேண்டும் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக தங்களது வாகனத்தில் ஏற்றிபாலக்காட்டுக்குக் கொண்டு சென்றனர்.அங்கு வைத்து ஜார்ஜ் ஸ்டீபனை கேரள போலீஸார் சித்திரவதை செய்து, அடித்து உதைத்துள்ளனர். போலீஸாரின் சித்திரவதைக்குஆளான ஸ்டீபன் காயமடைந்தார். அதன் பின்னர் அவரை கேரள போலீஸார் விடுவித்துள்ளனர்.
கோவை திரும்பிய ஸ்டீபன் போதனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரைக் கேட்டறிந்த கோவை போலீஸார்அதிர்ச்சி அடைந்தனர். தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் கேரளாவுக்கு ஸ்டீபனைக் கூட்டிச் சென்று சித்திரவதை செய்த கேரளபோலீஸாரின் செயல் முற்றிலும் சட்டவிரோதமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டீபனைக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்ததாக பாலக்காட்டைச் சேர்ந்த 15 போலீஸார் மீது கொலை முயற்சி, கடத்தல்உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போதனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள போலீஸாரின் செயல் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications