பெட்ரோல் விலை உயர்வுக்கு கம்யூனிஸ்டுகளே பொறுப்பு: பாஜக
வந்தவாசி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதுகண்டனத்துக்குரியது. விலை உயர்வுக்கு அவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர்எச்.ராஜா கூறியுள்ளார்.
வந்தவாசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து ராஜா பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைமத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் மீது சுமைக்கு மேல் சுமையை ஏற்றிவருகிறது.பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதாகவும், அதற்காககப் போராடப் போவதாகவும் இடது சாரிக் கட்சிகள் அறிவித்திருப்பதுவேடிக்கையாகவும், விநோதகமாகவும் உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அவர்களும் ஒரு அங்கமே. எனவே விலை உயர்வுக்குஅவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை முதல் முறையாக அமைத்தது வாஜ்பாய் தலைமையிலான அரசுதான். ஆனால் அதற்கு காங்கிரஸ்உரிமை கொண்டாட முயல்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசோ, அதை அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிடும். ஏற்கனவே இதை முடிவு செய்தாகி விட்டது. விஜயகாந்த் கட்சிஆரம்பிப்பதை பாஜக வரவேற்கிறது. ஆயினும் அவருடன் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும்எடுக்கப்படவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications