தமிழக பேருந்து எரிப்பு: முக்கிய துப்பு கிடைத்தது!

Subscribe to Oneindia Tamil

கொச்சி:

கேரளாவில் தமிழகப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கொச்சி காவல்துறைஉதவி ஆணையர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே தமிழக அரசுப் பேருந்து ஆயுதம் தாங்கிய சிலரால் கடத்தப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க கொச்சி காவல்துறை உதவி ஆணையர் சசிக்குமார் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை குறித்து சசிக்குமார் கூறுகையில், இதுவரை 100 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சில முக்கியத் தகவல்கள்கிடைத்துள்ளன. விசாரணையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சந்தேகப்படும்படியான சிலரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோழிக்கோடு, ஆழப்புழா, கோட்டயம், பாலக்காடுஆகிய பகுதிகளுக்கு தனிப்படைகள் விரைந்துள்ளன.

கோவை டி.எஸ்.பி. பெரியசாமி இங்கு வந்து விசாரணை குறித்து என்னுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் சிலபுகைப்படங்களைக் கொடுத்துள்ளார். அது விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

எங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு தகவலையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறோம். விரைவில் இதில் வெற்றிகிடைக்கும். இந்த தாக்குதல் திட்டமிட்ட ஒன்றாகத் தோன்றுகிறது என்றார் சசிக்குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+