யாரையும் பகைக்க விரும்பவில்லை: விஜயகாந்த்
மதுரை:
யாரையும் பகைத்துக் கொண்டு அரசியல் நடத்த நான் விரும்பவில்லை. அனைவருமே எனது நண்பர்கள்தான் என்று நடிகர்விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் வருகிற புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரசியல் மாநாடு தொடர்பான பணிகளை விஜயகாந்த் நேரில்சென்று பார்வையிட்டார். சில ஆலோசனைகளையும் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் கட்சி தொடங்குவது கண்டு பலருக்குப் பயம். எனது வளர்ச்சியைப்பார்த்து அவர்கள் பயந்து போயிருக்கிறார்கள். அதற்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது.
எனது கட்சி மாநாட்டுக்கு பஸ்கள், வேன்களைக் கொடுக்கக் கூடாது என்று மிரட்டல் வருவதாக எனக்குத் தகவல் வந்துள்ளது.இதற்காக நான் சோர்ந்து போய் விட மாட்டேன். எனது மாநாட்டுக்கு எப்படி வர முடியுமோ, அப்படி ரசிகர்கள் வந்துசேருவார்கள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை.
அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் எனது கட்சியின் தொடக்க விழா அழைப்பிதழை கொடுத்துள்ளேன். முதல்வர்ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு எனது மைத்துனரே நேரில் சென்று அழைப்பு கொடுத்துள்ளார். முதல்வர்வெளியூரில் இருந்ததால், அவரது செயலாளரிடம் கொடுக்கப்பட்டது.
எனக்கு நேரில் போய் கொடுக்க முடியாத அளவுக்கு படப்பிடிப்புகளும், மாாநட்டுப் பணிகளும் இருந்ததால் நான்போகவில்லை. உள்ளூர் தலைவர்கள் தவிர லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவர்களுக்கும் அழைப்புஅனுப்பப்பட்டுள்ளது.
வைகோ, ஜி.கே.வாசன், திருமாவளவன் ஆகியோருக்கும் அழைப்ப அனுப்பியுள்ளோம். யாரையும் நான் பகைத்துக் கொள்ளவிரும்பவில்லை. அதற்காகவே அனைவருக்கும் அழைப்பு அனுப்பியுள்ளேன் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications