34வது இடத்திற்கு முந்தினார் சானியா மிர்ஸா
புதுடெல்லி:
![]() |
இந்திய டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா, உலக மகளிர் டென்னிஸ் தரப் பட்டியலில் 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய டென்னிஸ் வரலாற்றில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் சானியா மிர்ஸா சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கஓபன் டென்னிஸ் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி படைத்து புதிய இந்திய சாதனையைப் படைத்தார்.
இதுவரை எந்த இந்திய வீராங்கனையும், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறியதில்லை.அந்த சாதனையை உடைத்த சானியா, காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற துரதிர்ஷ்டவசமாக தவறினார்.
காலிறுதிக்கு முந்தைய போட்டியில் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவாவிடம் தோல்வியுற்றார் சானியா. இப்போட்டியில்சானியா தோற்றுப் போனாலும் தரப்பட்டியலில் அவருக்கு அட்டகாசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் போட்டியின்போது உலக மகளிர் தரப் பட்டியலில் 42வது இடத்தில் இருந்து வந்த சானியா தற்போது 34வதுஇடத்தை எட்டிப் பிடித்துள்ளார். 888.75 புள்ளிகளுடன் சானியா இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆசிய அளவில் முன்னணி வீராங்கனையாக உள்ள ஜப்பானின் அய் சுஜியாமி 32வது இடத்தில் உள்ளார். இன்னொரு ஜப்பான்வீராங்கனையான பெங் ஷுயாய் 33வது இடத்தில் உள்ளார். இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா 148வது இடத்தில் உள்ளார்.
தரப் பட்டியலில் தொடர்ந்து மரியா ஷரபோவா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் லிண்ட்சே டேவன்போர்ட் 2வதுஇடசத்தில் உள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திப் பெண்ணான ஷிகா உபராய் 122வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு இவர் 151வது இடத்தில்இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications