விஜயகாந்த் விளம்பரங்களில் அரசு சின்னம்! அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

விஜயகாந்த் மன்ற மாநாடு தொடர்பான விளம்பரங்களில் தலைமைச் செயலகத்தின் படம், அரசு சின்னம் ஆகியவை இடம் பெறக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் புதன்கிழமை நடைபெறும் விஜயகாந்த் ரசிகர் மன்ற முதலாவது மாநில அரசியல் மாநாட்டையொட்டி தமிழகம்முழுவதும் ஆயிரக்கணக்கான விளம்பர பேனர்களை விஜயகாந்த் ரசிகர்கள் வைத்துள்ளனர். எங்கு பார்த்தாலும் இந்த விளம்பரபேனர்கள்தான் தெரிகின்றன.

திருச்சியில் வைக்கப்பட்டுள்ள பல பேனர்களில் தமிழக அரசின் சின்னமான கோபுரம், சென்னை தலைமைச் செயலகம் (புனிதஜார்ஜ் கோட்டை) ஆகியவற்றின் படங்களும் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து திருச்சியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், திருச்சியில் விஜயகாந்த் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்களில் அரசின் சின்னம் இடம் பெற்றுள்ளது. தமிழக அரசின்தலைமைச் செயலக படமும் இடம்பெற்றுள்ளது. இது தவறாகும். அரசு சின்னம் மற்றும் தலைமைச் செயலகம் போன்றவறறைத்தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுமனுவில் குமரேசன் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், சர்தார் சக்காரியா உசேன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பாது அரசு சின்னங்கள்விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.உத்தரவு நகலை திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+